மெய்ப்பொருள் - ஆரம்பம்.
"மெய்ப்பொருள் காண்பதறிவு" என்ற விடயத்தில் நான் சிறு வயது முதலே மிகவும் ஆர்வமாக இருந்து வந்தேன். இருந்ததனால் பல சிக்கல்களையும் அவ்வப்போது எதிர்நோக்கியுள்ளேன். அறிவியலைப் புகட்ட வேண்டிய ஆசிரியர் கூட என்னால் முன்வைக்கப்பட்ட சில இடக்கு மடக்கான கேள்விகளுக்கு அவரது கோபத்தை பதிலாக காட்டியதும் உண்டு.
இந்த விடயத்தில் எனக்கு சிறு வயது முதலே ஊக்கமும், உந்துதலும் கொடுத்தது என் தந்தையே!
சிறு வயதில் வீட்டில் உள்ள அனைத்து மின்னியல், இலத்திரனியல், மற்றும் ஏனைய உபகரணங்களை பாகம் பாகமாக்கி மீள அமைப்பதில் எனக்கு அலாதி ஆர்வம். இவ் முயற்சிக்கு குடும்பத்தில் ஏனைய உறுப்பினர்களிடமிருந்து கண்டனங்கள் கிளம்பிய போதும், அவ்விடயத்திலும் தொடர்ந்தும் ஊக்கமளித்து ஆதரவு தந்ததும் என் தந்தையே.
பின்னர் இது பல வழிகளில் எனக்கு உதவியது.
மெய்ப்பொருள் காண்பதறிவு என்று ஆரம்பித்து விட்டு நான் எங்கேயோ போய் விட்டேன்.
கண்ணை மூடிக்கொண்டு சொல்வதெல்லாவற்றையும் நம்புவது என்பது உண்மையிலேயே மூடத்தனம் தான். சில பெரியவர்கள், ஏன் ஆசிரியர்கள் கூட சில சமயம் சில விடயங்களுக்கு சரியான விளக்கம் கொடுப்பதில்லை. அப்படியென்றால் அப்படித்தான் என்று விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவார்கள். (அவர்களிற்கும் தெரியாதோ என்னவோ!!)
மூடத்தனத்திற்கு எதிராக, உண்மையிலேயே எம்தமிழர் அனைவரும் மெய்ப்பொருள் அறிய முற்படுவாராயின், எம்மினம் சிறந்து செழித்தோங்கும் என்ற எண்ணத்தில் இவ் வலைப்பூவினை ஆரம்பிக்கிறேன்.

0 மறுமொழிகள்:
Post a Comment
<< முகப்பு