மாந்தராயிரு! மந்தையாயில்லாமல்!!

ஏன்?
எதற்கு?
எப்படி?

போன்ற வினாக்கள் சிறுவர் முதல் பெரியோர் வரை நம் அனைவரது மனங்களிலும், அனைத்து விடயங்களுக்கும் ஏற்பட்டால் தான் நாம் மனிதராக பிறந்ததற்கு அர்த்தம் இருக்க முடியும்.

ஒன்றன் பின் ஒன்றாக மந்தைகள் தான் செல்லும். சில வேளைகளில் அவை கூட தங்கள் சொந்த அறிவை பயன்படுத்துகின்றன, சிந்திக்கின்றன என்பதுவும் நாம் அறிந்ததே.

ஆனால் சில வேளைகளில் பெற்றோர்களும், பெரியவர்களும் குழந்தைகள் ஏன், எதற்கு, எப்படி என்று கேட்கும் பருவம் வருவதற்கு முன்னரே பல மூடநம்பிக்கைகளை பிள்ளைகள் மீது திணிக்கிறார்கள்.

இதிலே வேதனை என்னவென்றால், இத்தனை வயதாகியும் அவர்களுக்கே அவர்கள் திணிக்கும் விடயத்திற்கு காரணம் தெரிந்திருப்பதில்லை. அதை அவர்கள் தெரிந்து கொள்ள முயற்சித்திருக்கவுமில்லை என்றே கருத வேண்டியுள்ளது.

இவ்வலைப்பூவின் வழி நான் யாரையும் புண்படுத்தவோ, அல்லது குறைகூறவோ விளையவில்லை என்பதை முன்கூட்டியே சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

அனைத்து விடயமும் ஆராயப்பட வேண்டியவையே.

அதை விடுத்து இது இப்படித்தான் என்று முரண்டு பிடிக்கும் தன்மைக்கு எதி்ர்மாறாகத்தான் நான் இங்கு சிந்திக்க விளைகின்றேன்.

இவ் "மெய்பொருள் காண்பதறிவு" என்ற சிந்தனைக்கு பக்கபலமாக உள்ள அனைவரையும் இவ்வலைப்பூவுடன் அரவணைத்துச் செல்ல விரும்புகின்றேன்.

("மெய்ப்பொருள்" என்பதற்கே வேறு அர்த்தம் கற்பிப்போரும் உள்ளனர், அது பற்றிப் பின்னர் பார்ப்போம்)

2 மறுமொழிகள்:

Blogger பாலசந்தர் கணேசன். said...

சுயசிந்தனை பிரகாசிக்க வேண்டும். ஆனால் அடுத்தவர்களை சுத்தமாக அண்டாமல் அறிவு விருத்தி அடைவது கடினம். இரண்டுக்கும் இடையே பாலன்ஸ் இருக்க வேண்டும்

6:22 AM  

Blogger விழி said...

தங்கள் கருத்துக்கு நன்றி பாலசந்தர்,
//ஆனால் அடுத்தவர்களை சுத்தமாக அண்டாமல்//

என் கருத்துப்படி அடுத்தவர்களை என்ன, அனைவரையும் அண்ட வேண்டும், மனிதனை மனிதனாக மதிக்கவேண்டும், நீங்கள் குறிப்பிட்டது போல் சுயசிந்தனை பிரகாசிக்க வோணடும்.
ஒவ்வெது கருத்துக்களையும் ஆராயவேண்டும், கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றக்கூடாது என்று எண்ணுகிறேன்.

8:20 PM  

Post a Comment

<< முகப்பு